மத்திய சென்னை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மத்திய சென்னை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்! மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியானது - அண்ணா நகர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி என்கின்ற சென்னையின் சில முக்கியமான பகுதிகளை கொண்ட ஒரு தொகுதி. ஏறத்தாழ 12 லட்சம் வாக்காளர்களாகிய நீங்கள் சென்றமுறை நாடாளுமன்றத்தில் உங்களையும், உங்கள் உணர்வுகளையும் எழுப்ப தகுதியானவர் என்று திரு. தயாநிதி மாறன் அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். சென்றமுறையும், அவர் தாத்தாவும், மாமாவும் உங்களிடம் ஆதரவு கேட்டனர். "அவர் ஆங்கிலம் நன்றாக பேசுவார்" என்பதினாலேயே அவரை டில்லியில் குடும்ப பிரதிநிதியாக அனுப்ப உங்கள் வோட்டுக்களை உபயோகப்படுத்தினர். அவர் நாடாளுமன்றத்தில் விவாதித்த நாட்களோ அல்லது உங்களுக்காக குரல் கொடுத்த நாட்களோ மிக சொற்பம். குடும்ப பிரச்சனைக்காக அவர் வேலை அதிகமாக செய்ததாகவே தெரிகின்றது. இதன் முத்தாய்ப்பாக, தனது சகோதரர் கொம்பனிக்கான தொலைபேசி, இவர் மந்திரி பதவியை உபயோகப்படுத்தி இலவசமாகவே உபயோகித்ததும், இந்த ஊழல் வெளியே தெரிந்ததும், பதவி விலகியதும் நாம் அனைவரும் அறிந்தத...