மாணவனை கொலைவெறிக்கு தூண்டும் கல்விதன்னை நிறுத்துவோம்! ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்க்கு வயது பதினைந்து தான் இருக்கும், அந்த வயதில், ஒரு மாணவனை கொலை செய்ய தூண்டும் அளவிற்கு கொடூரமாக நமது சமூகம் கல்விமுறையை அமைத்துள்ளது நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விஷயம். எப்படி இதை செய்கின்றோம்? - போட்டி நல்லது , போட்டியில் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் வாழ்க்கையில் வெற்றிபெறுவார், என்று அறிவுகெட்ட பெற்றோர்கள் - "உங்கள் பிள்ளையை நாங்கள் போட்டிக்கு தயார் செய்வோம்" , என்று இறைவன் முதல், புட்டியில் அடைத்த தவிட்டு கசண்டு வரை எல்லாவற்றையும் விற்கும், வியாபார ஓநாய் கூட்டம் - நூற்றிற்கு நூறு, எங்கள் பள்ளியில் எல்லோரும் நூறு, மிக அதிகமாக நூறு, என்று மாணவர்களின் வாழ்க்கையை கேடுத்தேனும் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளும் பள்ளிகள் - இப்படிப்பட்ட பள்ளிகளும், வியாபார கூட்டமும், பெற்றோரும் ஒன்றிணைந்து நடத்தும் நாடகங்களில், தமக்கு வாய்ப்பு கிடைத்ததே என்று, கொஞ்சமும் கூச்சமில்லாமல், கலந்துகொண்டும், ஆதரித்தும், பெருமை பேசியும், தங்கள் சிறுமையை வெளிக்காட்டும் ஆன்மிகவாதிகள், புத...